கோவை மாவட்டம் வால்பாறையில் +2 தேர்வில ஈட்டியார் எஸ்டேட் சேர்ந்த காமராஜ் சரோஜா தம்பதிகளின் மகள் இந்திரா பிரியதர்ஷினி சேக்ரெட் கார்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் +2 வகுப்பு படித்து வால்பாறையிலே முதல் மதிப்பெண் ஆக 576 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்று அனைவரிடத்திலும் வாழ்த்து பெற்று வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் அவரை நாம் சந்தித்து வாழ்த்து கூறியதோடு அவரிடம் பேசிய பொழுது அவர் கூறுகையில் வருங்காலங்களில் ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்று அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குறைகளை தீர்த்து வைப்பேன் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பேன் என்று கூறினார் இவருக்கு நாளைய வரலாறு பத்திரிக்கை சார்பாக P. பரமசிவம் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
அடித்தட்டு மக்கள் நிறைந்த வால்பாறை பகுதியில் +2 தேர்வில் 100% தேர்ச்சி அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும், தேர்வு வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் நாளைய வரலாறு பத்திரிகை சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம் இதுகுறித்து P.பரமசிவம் கூறுகையில்;
வால்பாறை பகுதியில் +2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு மேல்படிப்பு படிப்பதற்கான இலவச ஆலோசனை மற்றும் சிறந்த கல்லூரிகளில் சேர்வதற்கு வழிவகை செய்யும் வகையில் இலவச ஆலோசனை வழங்கப்படும் ஆலோசனை தேவைப்படும் மாணவச் செல்வங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 94867 76838.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.