விளாத்திகுளம்,மே.28: விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 91 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில் விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் 202 , யூடிஆர் 11, ஓஏபி 35,இலவச வீட்டு மனை பட்டா 234, உட்பிரிவு 162, இதர 37 என மொத்தம் 681 மனுக்கள் பெறப்பட்டது. இறுதி நாளான (27.5.25) அன்று முதியோர் உதவித்தொகை 11,இ-பட்டா 50, பட்டா மாறுதல் 30 என 91 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
நிகழ்வில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஆணையை மாவட்ட வருவாய் அலுவலர்(நிலம் எடுப்பு பிரிவு) சங்கரலிங்கம் வழங்கினார்.சிப்காட் தாசில்தார் சந்திரன்,விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன்,மண்டல துணை தாசில்தாா்கள் பொன்னம்மாள்,சுடலைமாடன்,ஆர்ஐ ராணி உட்பட விஏஓ மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.