புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு 2024-25 கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற காலத்தில் இருந்து அரசு பள்ளியை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் விருதுக்கு அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 180 க்கு மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. சிறப்பான கற்றல் கற்பித்தல் நடைபெற்று வருகிறது கணினி பயன்பாடு மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கடந்த ஆண்டு நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் பொருட்கள் கல்வி சீர் வழங்கி சிறப்பித்தனர்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை முன்னேற்றி வருகிறார்கள். தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி ஒருங்கிணைப்பில் கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, அறிவியல் ஆசிரியர் ரஹ்மத்துல்லா, இடைநிலை ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய், செம்ம ராகினி சகாய ஹில்டா, மற்றும் கணினி உதவியாளர் தையல்நாயகி, மழலையர் வகுப்பு ஆசிரியை கௌரி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பாடு பள்ளியை மேம்படுத்தி வருகிறார்கள். பள்ளியில் முக்கிய தினங்கள், முக்கிய விழாக்கள், அறிவியல் திருவிழாக்கள் மன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறார்கள்.
வருகிற ஜூலை ஆறாம் தேதி மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கி பாராட்டப்படுகிறது. பேராசிரியர் அன்பழகன் விருது பெற்ற பள்ளிக்கு உயர் அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு பொதுமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.