கோவை மாவட்டம் வால்பாறை: “உங்கள் வீட்டுப் பிள்ளையாக கூப்பிட்ட குரலுக்கு உங்கள் குறைகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தீர்க்க ஓடி வருவேன் என்று உடன்பிறப்போடு கூட்டமாக வந்து பணத்தையும் பரிசு பொருட்களையும் கொடுத்து எளிதில் எங்கள் வாக்குகளை பெற்றுக் கொண்டு அடிப்படை வசதிகள் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட சரியான முறையில் சாலை வசதிகள் கிடையாது குடியிருப்பு அருகில் வெளிச்சம் உள்ள தெரு விளக்கு இல்லால்,சுத்தமான குடிநீர் வசதியும் அரசின் திட்டங்களை எளிதில் பெற முடியாமல் வேதனைப்படுகிறோம்.” என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக சோலையார் மூன்றாவது பிரிவு சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்; “எங்கள் குடியிருப்பு அருகில் எஸ்டேட் மருத்துவமனை உள்ளது. அருகில் அடர்ந்த வனப் பகுதி, சோலையார் 3 பிரிவு மக்களுக்கும் மயான மையம் உள்ளது. இதனால் வனவிலங்கு அதிக அளவில் அதிக நேரம் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. நாங்கள் சொன்னதற்காக பெயரளவில் குறைந்த வெளிச்சத்தில் உள்ள தெருவிளக்கு நகராட்சி மூலம் அமைத்தனர். ஆனால் அது எங்களுக்கு பயன் உள்ளதாக இல்லை. இது தொடர்பாக பலமுறை புகார் கூறியும் மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. மக்கள் பிரதி நிதி தான் இந்த நிலைமை என்றால் மக்கள் வரிப்பணத்தில் உலாவி வரும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. நாங்கள் எங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்போம் என்று தெரியவில்லை.” என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆய்வு செய்ததில் சாலைகள் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. தெரு விளக்கும் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. வனவிலங்கு வருவதும் தெரியாது. ஆனால் சாமானிய மக்கள் அடித்தட்டு மக்கள் சிரமப்படுகின்றன. மக்கள் பிரதிநிதி தான் இந்த நிலை என்றால் மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேவையான சேவை செய்யக்கூடிய அரசு அதிகாரிகளும் தனக்கு வரக்கூடிய ஊதியங்களை பெற்றுக்கொண்டு வாகன வசதியோடு உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பிரச்சனைகளையும் சரி செய்யும் அதிக வல்லமை பெற்ற வருவாய் துறையும், மாவட்ட நிர்வாகமும் மக்கள் பிரதிநிதி போல் செயல்படுவதால் இவர்கள் பிரச்சனை நிரந்தர தீர்வு ஏற்படாமல் உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வருவாய் துறை, மாவட்ட நிர்வாகம் மக்களின் அடிப்படைத் தேவைகளை காலம் தாழ்த்தாமல் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்து கொடுக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்களின் அடிப்படை தேவைகளை வால்பாறை மட்டும் எஸ்டேட் பகுதிகளிலும் செய்து கொடுங்கள் என்று பொதுநலத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்போடு மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-P.பரமசிவம்.