2024 டிசம்பரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும்….
2024 _ 25 ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை விடுவிக்க கோரியும்….
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய செயலாளர் சீனி பாண்டியன் தலைமை வழங்கினார். இப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் மாவட்ட தலைவர் ஆர்.ராகவன் மாவட்ட துணை தலைவர் ஜி. ராமசுப்பு கயத்தார் ஒன்றிய தலைவர் தவமணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சி ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.