திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ஆகியோர் தலைமையில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 07.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு திரு. சந்தோஷ் ஹடிமணி இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று (05.07.2025) திருச்செந்தூர் IMA மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உட்பட தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர் திருநெல்வேலி நகரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை நகரம் ஆகிய மாவட்டம்/நகரங்களைச் சேர்ந்த 09 காவல் கண்காணிப்பாளர்கள், 32 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 73 காவல் உதவி கண்காணிப்பாளர்/காவல் துணை கண்காணிப்பாளர்கள், 87 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட சுமார் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் உதவி/ காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.