கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 96 வது வார்டு பகுதியான ஆண்டாள் தோட்டம் எனும் பகுதியில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் உள்ள நாய் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை கடித்ததாக புகார் கூறுகிறார்கள். மேலும் தெருநாய்களின் தொல்லையும் அதிகமாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகிறார்கள். சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களிடமும் இடத்தையும் ஆய்வு செய்த பிறகு முறையே மாநகராட்சி அதிகாரிக்க தகவல் தெரிவித்ததாக கூறுகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக சமூக ஆர்வலர் குறிச்சி சிவா அவர்கள் கூறுகையில்:–
“ஆண்டாள் தோட்டம் பகுதியில் சில நாட்களாகவே தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம். இது சம்பந்தமாக காவல்துறையிடம் புகார் அளித்தால் காவல்துறை அதிகாரிகள் எங்களால் ஓன்றும் செய்ய இயலாது என்று கூறுகிறார்கள். மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டால் அந்த நாயை பிடித்து இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை முடித்து மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விடுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இங்கு கடி வாங்குவது நாங்கள் தான். ஒரு மாதத்தில் 20க்கும் மேற்பட்ட வயதானவர்களை நாய் கடித்துக் கொதறி உள்ளது, மேலும் இந்த பகுதியில் அதிக குழந்தைகளும் உள்ள காரணத்தினால் உடனடியாக மாநகராட்சி ஒரு தீர்வு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இங்குள்ள பொதுமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சாலை மறியல் போராட்டம் செய்வோம் என்று கூறிக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-MMH.