கேரள மாநிலம் சுற்றுலா தலமான மூணார் பகுதியில் ஜீப் சவாரி என்பது சுற்றுலா பயணிகளுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகவே கருதுகின்றனர். அப்படிதான் சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து ஒரு குடும்பம் மூணாறுக்கு சுற்றுலாவிற்கு வந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போதமேடு என்ற இடத்தில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அடுத்த நாள் காலையில் அதாவது நேற்று காலையில் மூணார் பகுதிகளை சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஜீப் ஏறிய உடனே ஒரு வளைவு தாண்டியதும் ஜீப்பானது தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்துக்குள் விழுந்து தேயிலை தோட்டத்திற்குள் சென்று விபத்துக்குள்ளானது.
உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்களும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தவர்களும் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு மூணாறு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 50 வயதான பிரகாஷ் என்பவர் மரணம் அடைந்தார். சிறுவர்கள் முதல் மீதமுள்ளவர்கள் அனைவரையும் மேல் சிகிச்சைக்காக தமிழ்நாடு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தானது அப்பகுதியில் அச்சத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்,
மூணாறு.