டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒற்றை வார்த்தையில் 70 வயதான பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்த சைபர் குற்றவாளிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாகவே தமிழகம் உட்பட இந்தியாவில் பல மாநிலங்களை டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஒரு திருட்டு கும்பல் மூகமுடி அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதை போல, டிஜிட்டலை பயன்படுத்தி உலகத்தில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு ஒருவரை ஓர் அறைக்குள் சிறைப்படுத்தி டிஜிட்டல் அரெஸ்ட் என்ற வார்த்தையை கொள்ளையடிக்கும் செயல்கள் அரங்கேறி வருகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கும்பல் KYC புதுப்பிக்க வேண்டும் என கூறுவது, உங்களின் சட்ட விரோத பொருட்கள் எங்களிடம் உள்ளது என மிரட்டுவது, சுங்கவரித்துறை அதிகாரிகள் என பேசுவது, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவது, காவல்துறை அதிகாரிகள் பேசுவது, உங்கள் பெயரில் உள்ள கூரியரில் போதை பொருட்கள் கிடைத்துள்ளது என கூறுவது என பல வழிகளில் பேசி டிஜிட்டல் கைது செய்வதாக குற்றவாளிகள் மிரட்டி கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பல கோடிக் கணக்காண பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் காவல்துறையினர் எவ்வளவோ டிஜிட்டல் அரெஸ்ட் பற்றி விழிப்புணர்வு செய்தலும் சைபர் குற்றவாளிகள் தினுசு தினுசாக யோசித்து ஏதாவது ஒரு வழியில் சைபர் குற்றங்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண் மருத்துவருக்கு கடந்த மே 28-ந் தேதி செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை அமித் குமார் என்றும் தொலைத் தொடர்பு துறை மூத்த அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார்.
பின்னர், பெண் மருத்துவரின் சிம் கார்டு, ஆதார் எண்ணை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக மர்ம நபர் மிரட்டினார். இதைத் தொடர்ந்து மற்றொரு மர்ம நபர் வாட்ஸ் அப் வீடியோ காலில்பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு தன்னை மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமதன் பவார் என்று அறிமுகம் செய்து கொண்டார். அந்த ஆசாமி காவல்துறை உடையில் மிரட்டும் தொனியில் பேசியதால் அந்த பெண் மருத்துவர் மிகுந்த அச்சமடைந்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் ரூ.538 கோடி மோசடி வழக்கில் சிக்கி உள்ளார். இந்த மோசடியில் உங்களது செல்போன் சிம் கார்டு, ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம். இந்த வழக்கில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று கூறி அந்த மர்ம நபர் மிரட்டியுள்ளார்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு பெண் மருத்துவர் பல்வேறு தவணைகளில் ரூ.3 கோடியை அனுப்பினார். இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மும்பை காவல் துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து மும்பை சைபர் குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.