​பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடியில் புதிய பேருந்து நிலையம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

பொள்ளாச்சி நகர மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பயண வசதிகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விழாவில் பேசிய துணை முதல்வர் திராவிட மாடல் அரசு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்திற்கு இந்தப் பேருந்து நிலையம் ஒரு சிறந்த சான்று. இது பொள்ளாச்சி நகரத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார்.

புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன
ஒரே நேரத்தில் பல பேருந்துகள் நின்று செல்ல ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
​சுத்தமான குடிநீர் வசதி நவீன கழிப்பிடங்கள் மற்றும் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைகள் மற்றும் உணவகங்களுக்கு போதிய இடவசதி ஒதுக்கப்பட்டுள்ளது.

​பொதுமக்கள் இந்தப் புதிய பேருந்து நிலையத்தை முறையாகவும் தூய்மையாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தின் மூலம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts