கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் (LPU) வின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! – பெற்றோர்கள்,மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!

பஞ்சாபின் புகழ்பெற்ற லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டி (LPU) சார்பாக மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரண்டாவது பதிப்பாக நடைபெறும் இதில் கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும், அவர்தம் பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் சாமி ஆனந்த் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர்,உயர் கல்வியை பயிலும் மாணவர்கள் அது சார்ந்த பயிற்சி மையங்கள் அல்லது பல்கலைகழகங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக லவ்லி புரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தின் இணைப் பீடாதிபதியும் பேராசிரியருமான டாக்டர் லலித் பல்லா ,டாக்டர் விஷால் சர்மா,மற்றும் டாக்டர் நிதின் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய பேராசிரியர்கள் குழுவினர், மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் நேரடியாகக் கலந்துரையாடினர்.

மாணவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், உலகளாவிய உயர்கல்வி வாய்ப்புகள், தொழில்துறை சார்ந்த நவீன பாடத்திட்டங்கள், மாணவர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், சர்வதேச கல்வி அனுபவங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் (Scholarships) குறித்து விரிவான ஆலோசனைகளும், முழுமையான விழிப்புணர்வு தகவல்களும் வழங்கப்பட்டன. மேலும், கல்வியில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கும், விளையாட்டு மற்றும் கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், லவ்லி புரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தின் துணை இயக்குநர் சஞ்சீவ், மற்றும் தகவல் தொடர்புத் துறை உதவி இயக்குநர் ஜிதேந்திர குமார் தீக்சித்,சரவணக்குமார்,முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

சீனி,போத்தனுர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts