‘ரன் ஃபார் ஹர்’ – கோமகள் மாரத்தான் 2026 டி- ஷர்ட் வெளியீட்டு விழா!!

கோவை: பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – Run for Her” நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, ராஜீவ் காந்தி நகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Off Screen Hub சார்பில், நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் அவர்கள் டி-ஷர்ட்டை வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

மேலும் திரு. விஜய் ஆனந்த், ராபர்ட் போஷ் நிறுவனத்தின் HR குழுத் தலைவர் திருமதி வனிதா, இன்ஃபினிட்டி நிறுவனத்தின் திரு. ராஜேஷ் ஆகியோருடன், டாக்டர் நித்யா, டாக்டர் மல்லிகா, டாக்டர் கே. மோகனா மற்றும் பார்வதி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கான இந்த முயற்சியை பாராட்டினர்.

“Run for Her” என்பது ஒரு மாரத்தான் மட்டுமல்ல; பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம், உடல்நலம் மற்றும் அதிகாரமளிப்பை முன்னிறுத்தும் ஒரு சமூக இயக்கம் என்பதை விருந்தினர்கள் வலியுறுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts