
கோவையில் தனியார் திருமண மண்டபத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு (SFRBC) மற்றும் ஓபிசி மக்கள் உரிமை இயக்கம் (OBC RIGHTS) இணைந்து நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 32 மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு வெஸ்டா குழுமத்தின் இயக்குனர் சேரலாதன் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரூட்ஸ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ..மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கிச் சிறப்பித்தார்.
முன்னதாக, SFRBC அமைப்பின் செயலாளர் வழக்குரைஞர் திருஞானசம்பந்தம் வரவேற்புரையாற்றினார். இந்த விழாவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.”
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.









