கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி!!

ஜூலை 10 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டப அரங்கில் நடைபெறும் இதில் இலவச அனுமதியுடன் சிறப்பு தள்ளுபடி விற்பனை!!

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பனி்ரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் கோடை கால விற்பனை கண்காட்சியாக கோவை அவினாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் தமது சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது.

ஜூலை 10,11,12 ந்;தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன..

மேலும் தங்கம் மற்றும் வெள்ளி நகை ஆபரணங்கள்,அழகான பேஷன் ஆடைகள் குறிப்பாக கோடை காலத்திற்கு ஏற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு விதமான ஆடைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன..

முன்னதாக,
கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,அக்‌ஷிதா மயங்க்,ஸ்வேதா மூகாம்பிகா,கீதா ராம்குமார்,நிவேதா தர்ஷன்,சதுரி ஸ்ரீஜித் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில்,
சிறப்பு விற்பனை கண்காட்சியாக துவங்கப்பட்டுள்ளதாக இந்த விற்பனை கண்காட்சியில், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான சிறப்பு தள்ளுபடியுடன் அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தனர்..

நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை கண்காட்சியில்,
பெண்கள் பயன்படுத்தும் இயற்கை முறையிலான அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றிற்கு தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாக கூறினர்..

கோ கிளாம் ஒவ்வொரு சீசனிலும் கோவை,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல்,உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts