கோவை ஆர்.எஸ்.புரத்தில் தமிழகத்தின் முதல் எலைட் டென்டல் ஸ்டுடியோ தொடக்கம்!!

நவீன தொழில்நுட்பத்துடன் அனைத்து பல் சிகிச்சைகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ள மையத்தை முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், தமிழகத்தின் முதல் கிளையாக புதிய நவீன எலைட் டென்டல் ஸ்டுடியோ பல் மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில், . முன்னாள் அமைச்சர்,தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல் மருத்துவ மையத்தை திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பல் மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து விதமான பல் சிகிச்சைகளையும் வழங்கும் வகையில் இந்த புதிய பல் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எலைட் டென்டல் ஸ்டுடியோ நிறுவன இயக்குனர்கள்,டாக்டர் ஃபாத்திமா நிஃப்லா,அமல் சித்தார்த்,ஜாஃபர் ஹம்ஸா,மற்றும் ஜசீம் ஆகியோர் . கூறுகையில்;
பற்களின் பொது பராமரிப்பு முதல் பல் சொத்தை, பல் ஈறு தொடர்பான பிரச்சினைகள், வேர் சிகிச்சை, பல் அகற்றுதல், செயற்கைப் பற்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. மேலும், பற்களின் வரிசையை சீரமைத்தல், பற்களை அழகுபடுத்துதல், புன்னகையை மேம்படுத்துதல் உள்ளிட்ட அழகு சார்ந்த பல் சிகிச்சைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பற்களின் அமைப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்தை நவீன முறையில் பரிசோதித்து, நோயாளிகளின் தேவைக்கேற்ப சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பல் மருத்துவத்தில் தொடர்ந்து வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், சிகிச்சையின் துல்லியத்தையும் நோயாளிகளின் வசதியையும் மேம்படுத்தும் வகையில் இந்த மையம் செயல்பட உள்ளது.

மேலும், பல் சிகிச்சைக்காக வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையை தவிர்த்து, பல் மருத்துவம், பல் வரிசை சீரமைப்பு மற்றும் பல் அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்த தமிழகத்தின் முதல் எலைட் டென்டல் ஸ்டுடியோ, நவீன பல் மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்யும் புதிய முயற்சியாக அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts