கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் உலகப் புகைப்பட தினம்!!

கந்தர்வகோட்டை ஆக 19

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வ கோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக புகைப்பட தினம் குறித்து பேசும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இது புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் நாளாகும். லூயிஸ் டாகுவேரே கண்டுபிடித்த ‘டாகுரியோடைப்’ புகைப்பட முறை 1839-ல் பிரெஞ்சு அரசால் உலகிற்கு இலவசமாக வழங்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மனிதர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதிலும், உலக வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பைக் கவுரவிப்பது. புகைப்படம் என்பது ஒரு கலை. அதற்கு மிகப்பெரிய வலிமை உள்ளது. உலக வரலாற்றை மாற்றும் சக்தி புகைப்படத்திற்கு உண்டு. புகைப்படம் ஒவ்வொருவரின் வாழ்க்கையோடும் ஒன்றி இணைந்திருக்கிறது. புகைப்படமானது வரலாற்று நிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள், பொதுக்கூட்டம், தலைவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது.

ஒரு தலைமுறையின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் ஒரு வழிகாட்டியாக புகைப்படம் விளங்குகிறது. தூரிகையைக் கொண்டு ஒரு படத்தை வரைவதற்குப் பதிலாக, மிகத் துல்லியமாக ஒரே நிமிடத்திற்குள் புகைப்படம் எடுத்து, பல நகல்களையும் எடுத்து விடலாம். ஒரு புகைப்படத்திற்குள் பல கதைகள் இருக்கின்றன. பல தகவல்கள் புதைந்து கிடக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

சில நூறு பக்கங்கள் எழுதி விளக்க வேண்டியதை ஒரு புகைப்படம் எளிமையாக விளக்கிவிடும். அறிவியல் வளர்ச்சிக்குப் புகைப்படம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது என்று பேசினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts