கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிஎல்கை பந்தயம் : சீறிப்பாய்ந்த 61 ஜோடி மாடுகள்!

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிஎல்கை பந்தயம் : சீறிப்பாய்ந்த 61 ஜோடி மாடுகள்!

வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் திருக்கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு,43-ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

சின்னமாடு,பெரியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற நடைபெற்ற இந்தமாபெரும் மாட்டு வண்டிகள் எல்கை பந்தயத்தில், மதுரை, திருநெல்வேலி, தேனி,கம்பம்,சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 61 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக 7 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை பரிசுபணம் வழங்கியும் ,LED டிவிகள் பரிசாக வழங்கியும் கௌரவிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மேல்மாந்தையிலிருந்து வைப்பார் கிராமம் வரை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் பந்தயரசிகர்கள் மாட்டுவண்டி பந்தயத்தினை கண்டு ரசித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts