சிறுத்தையிடம் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாய்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அப்பர் பாரளை  பகுதியில் வசித்து வரும் குருசாமி – நாகஜோதி தம்பதியினரின் 5 வயது மகன் தீக்சிதன் தாயின் வீரத்தால் சிறுத்தையிடம் இருந்து மீட்கப்பட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிறுவன் தீக்சிதன் தனது தாயின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுவனைக் கடித்து இழுத்துச் சென்றது. அதிர்ச்சியடைந்த தாய் நாகஜோதி சற்றும் யோசிக்காமல் கூச்சலிட்டவாறே சிறுத்தையை துரத்தி  சுமார் 100 அடி தூரம் துரத்திச் சென்று போராடினார். தாயின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், சிறுத்தை சிறுவனைக் கைவிட்டு காட்டுக்குள் ஓடியது. விரைந்து வந்த அப்பகுதி மக்கள் சிறுவனையும் தாயையும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுத்தையின் தாக்குதலில் சிறுவனின் வலது காது மற்றும் தலையின் பின்புறத்தில் பலத்த காயமும் தாய்க்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது.. முதலுதவிக்கு பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக 108 வாகனத்தின் மூலம் கோவையில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் திவ்யக்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts