இதயக் குறைபாடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான்!!

ஜி.கே.என்.எம்.மருத்துவமனை சார்பாக நடைபெற்ற இதில் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

கோவை: இதயக் குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் 4-வது ஆண்டாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளி முன்பாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கோகுலகிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, பிரீமியர் ஃபைன் லினன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் சாந்தி ஸ்ரீனிவாசன் மற்றும் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் மற்றும் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஓட்டத்தில், கோவை மற்றும் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பிறவியிலேயே ஏற்பட்ட இதயக் குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள், தங்கள் குடும்பத்தினருடன் இந்த ஓட்டத்தில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் 1 மற்றும் 3 கி.மீ. தூரத்துக்கான மகிழ்வோட்டமும், 5 மற்றும் 10 கி.மீ. தூரத்துக்கான போட்டி ஓட்டமும் நடைபெற்றன. கோவை மாவட்ட தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts