கோவையில் நடைபெற்ற பல்ஸ் ஹார்ட்டத்தான் 2026 – 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு

இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி மாவட்டம் 3206 மற்றும் எஸ்.பி.டி. மருத்துவமனை இணைந்து 5 கிலோமீட்டர் ‘பல்ஸ் ஹார்ட்டத்தான் 2026’ மாரத்தான் கோவையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ராம்நகரில் உள்ள எஸ்.பி.டி. மருத்துவமனை முன்பாக துவங்கிய மாரத்தான், நடை, மெதுவோட்டம் மற்றும் ஓட்டம் என நடைபெற்று, நேரு மைதானத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக இதன் துவக்க விழாவில், ரோட்டரி மாவட்டம் 3206 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர். எஸ். மாருதி, ஐ.எம்.ஏ. தமிழ்நாடு 2027 தலைவர் டாக்டர் ஏ. கே. ரவிக்குமார், எமரால்டு குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில்,ரொட்டேரியன் டாக்டர் சுப்புராஜா இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இதய நோய்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்வில் ‘இதய ஆரோக்கிய கிராமம்’, சிபிஆர் செய்முறை விளக்கம், ஸும்பா நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பங்கேற்பாளர்களுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ரொட்டேரியன்கள் குர்பிரீத் சிங், காட்வின் மரியா விசுவாசம், சுவாமிநாதன் டாக்டர் சித்ரா மனோகர், கணேஷ், டாக்டர் நாகராஜன் டாக்டர் செந்தில் குமார் என். மற்றும் கோகுல் ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts