கோவை VGM மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி!!

கோவை: மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் உலக இதய தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணி, ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் கார்னரில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் நிறைவடைந்தது.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வி.ஜி.எம் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, வரவேற்புரை ஆற்றினார்.இதய நோய்களைத் தடுப்பதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட காரணிகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், நோய் வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அமர்வு, உறுதிமொழி ஏற்பு, இதயநோய் நிபுணர் டாக்டர் டி. தர்மராஜனின் சிறப்புரை மற்றும் உயிர்காக்கும் சிபிஆர் செயல்முறை விளக்கம் ஆகியவை நடைபெற்றன.
வி.ஜி.எம் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றனர்.
இதயத்தை காப்போம்… ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்வு செய்வோம்! என வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts