கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை கம்மாலப்பட்டி பகுதியில் அதிக அளவில் தென்னைநார் லோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது மின்சார கம்பி உரசியதால் கண்ணிமைக்கும் நேரத்தில் தென்னை நாரில் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயை அனைத்தாலும், லாரி தீக்கிரையானது.
-M.சுரேஷ் குமார்.