இந்தியாவின் 73 வது குடியரசு தினம் நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
அதேபோல சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
காலை 8 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.
அதன்பின்பு நடந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்களால் விருதுகளும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குடும்ப நலத்துறையின் சார்பில் சிறந்த மருத்துவராகப் பணி புரிந்ததற்காக பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் நபீஷாபானு அவர்களும், சுகாதார மேற்பார்வையாளரகப் பணிபுரிந்த மதியரசு மற்றும் தற்போது பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் ஆகியோரும் தேர்தெடுக்கப்பட்டு பாராட்டு சான்று மற்றும் பரிசுக் கேடயம் வழங்கப்பட்டது.
இதில் எழில்மாறன் அவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு விருதுகள் நேற்றைய விழாவில் வழங்கப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் சிறப்பாகப் பணி புரிந்தமைக்காக சிங்கம்புணரி வட்டத்தை சேர்ந்த தனிவட்டாட்சியர் சுந்தரராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜலெட்சுமி, சிங்கம்புணரி வருவாய் ஆய்வாளர் இராஜாமுகமது மற்றும் தட்டச்சர் மாரிமுத்து ஆகியோருக்கு கேடயமும், நற்சான்றும் வழங்கப்பட்டது.
மேலும், சிங்கம்புணரியில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் சார்பு ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் தற்சமயம் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் குகன் ஆகியோரது செம்மையான பணியினைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் இருவரும் பாராட்டு பத்திரமும் பரிசுக் கேடயமும் வழங்கினர்.
புழுதிபட்டி காவல் நிலைய தலைமை காவலர் தென்னவன் மற்றும் வேங்கைபட்டியை சேர்ந்தவரும், தற்போது நெற்குப்பை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கர்ணன் ஆகியோரின் பணியைப் பாராட்டி தமிழக முதல்வரின் சிறந்த காவலருக்கான பதக்கமும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டன.
– அப்துல்சலாம்.