நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட, பிற மத்திய அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் இந்திய நாட்டின் பெருமையை பறை சாற்றும் விதமாக சாதனை விளக்க அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன. அதையடுத்து, இந்தியாவின் தனித்துவமான `வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தும்விதமாக பரதநாட்டியம், கதகளி போன்ற பல்வேறு மாநிலங்களின் நடனம் மற்றும் இசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கோவைக்கு பெருமை சேர்க்கும் வகையில், கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் குழுவை சேர்ந்த பரதநாட்டிய மாணவிகள் 14 பேர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு நாட்டியம் ஆடி அசத்தினர். இவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
இவர்கள் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் 11 நிமிடங்கள் நடனமாடினர். குரு மிருதுளா ராய் ஏற்பாட்டில் நடைபெற்ற இதில் கலந்து கொண்டு, தலைநகர் டில்லியில் குடியரசு தின விழாவில் நடனமாடிய கோவை நாட்டிய மாணவிகளை கோவை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கலைத்துறையினர் டில்லி குடியரசு தினவிழாவில் நாட்டியம் ஆடி அசத்திய மாணவிகளை பூங்கொத்து மற்றும் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில், பரதநாட்டியம் வழக்கமாக டெல்லியில் உள்ள பள்ளி மாணவிகள் நடனம் ஆடாமல், தமிழகத்தில் அதுவும் கோவையிலிருந்து பரதநாட்டிய மாணவிகள் பங்கேற்று நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
– சீனி,போத்தனூர்.
One Response
Nalayavaralaru is fact