சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் எய்டுஇந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், காவல்துறையினருடன் இணைந்து ஒமிக்ரான் தொற்று சம்பந்தமான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை சிங்கம்புணரி பேருந்து நிலையம் தொடங்கி நான்கு முனை சந்திப்பு சாலையில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து ஒமிக்ரான் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இன்று முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் முகக்கவசங்களை வழங்கினார்.
பிரச்சாரத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி கலந்துகொண்டார்.
இதில் எய்டு இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை,
ஒன்றிய கருத்தாளர் பழனி கணேஷ், யுரேகா கருத்தாளர்கள் திவ்யா, வள்ளி, யுரேகா ஆசிரியர்கள் அனு, மீனாட்சி, மணிமேகலை, முருகேஸ்வரி, மேகலா, எய்டு இந்தியா தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.