திருப்பூர் பெருமாநல்லூர் வட்டாரத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் ரிசர்வ் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே பர்னிச்சர் கடை ஒன்று உள்ளது அதில் வேலை செய்யும் செக்யூரிட்டி அவரை அந்த சிறுத்தை தாக்கியது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சிறுத்தையை தாக்கியதால் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலறிந்த ரிசர்வ் போலீஸ் தற்பொழுது பெருமாநல்லூர் மற்றும் அம்மாபாளையம் பகுதியில் சிறுத்தையை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ட்ரோன் கேமரா மூலம் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.