தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் 2022 காண உள்ளாட்சி தேர்தல் (மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும்
பேரூராட்சிகள்) நடத்தப்படும் தேதி குறித்த விவரங்கள் 26.01.2022 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணி அளவில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதியின் படி கோவை மாநகரம், வெள்ளலூர் மற்றும் இருகூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்திருக்கும் தனிநபர்கள் அவர்களது துப்பாக்கிகளை அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட படைக்கலப் பாதுகாப்பு கிடங்குகளிலோ ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அங்கீகாரம் பெற்ற படைக்கல பாதுகாப்பு கிடங்கில் ஒப்புவிக்கும் பட்சத்தில் அதற்குண்டான ஒப்புகைச் சான்றிதழ் நகலை அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் படைக்கலன்களை ஒப்புவிக்கும் உத்தரவில் இருந்து மத்திய, மாநில காவல் பணியில் உள்ளவர்களுக்கும் மற்றும் வங்கித் துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கு விலக்களிக்கப்பட்ட உள்ளது. வங்கித் துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் படைக்கலன் உபயோகிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து கடிதம் பெற்று சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.