தமிழக மக்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆவலாக எதிர்பார்த்து இருந்த மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை இன்று அல்லது நாளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் 22வது வார்டு சேரன் மாநகர் பகுதியில் ஆண்ட கட்சிக்கும் ,ஆளும் கட்சிக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய கட்சிகளான திமுகவும் ,அதிமுகவும் மூத்த அரசியல் பிரமுகர்கள் , மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் , களப்பணியில் சிறந்தவர்கள் என்று பட்டியலிட்டு ஒரு சிலரை தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிருக்கு உண்டான விடை இன்று அல்லது நாளை தெரியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும். இருந்த போதிலும் மக்கள் தாங்கள் முனுமுனுக்கும் வேட்பாளர்கள் இரண்டு கட்சிகளிலிருந்து நிறுத்தப்பட்டால் போட்டி கடுமையாக இருக்கும் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
-சாதிக் அலி.