கோவை மாவட்டம் பீளமேடு ரயில் நிலையம் அருகாமையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மயிலொன்று அடிபட்டு இறந்தது.
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் சில இடங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளாக இருப்பதன் காரணத்தினால் இப்பகுதிகளில் பறவைகளும் , மயில்களும் வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று மதியம் பீளமேடு ரயில் நிலையம் அருகாமையில் சுற்றித்திரிந்த மயிலொன்று ரயில் தண்டவாளத்தை கடக்க முற்படுகையில் அவ்வழியே வந்த ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
-சாதிக் அலி.