பெங்களுரூவை தலைமையிடமாகக் கொண்டு ஹெல்த் கேர் முதல் அனைத்து விதமான தேவைகளுக்கும் அவர்கள் வீடுகளுக்கே சென்று சேவை வழங்கும் நிறுவனம், எல்டர் எய்ட் டாக்டர், வந்தனா நாடிக் நாயர் மற்றும் சந்தோஷ் ஆப்ரகாம் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சேவை கோவையில் துவங்க உள்ளது. இந்நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய சந்தோஷ் ஆப்ரகாம்,எங்களது நிறுவனத்தில் பல்வேறு தரப்பினர் இதர சேவைகளால் பயனடைவது மட்டுமல்லாமல் அவர்கள் ஆன்லை ன் வழியாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான நிகழ்ச்சிகள், ஆன்லைன் மூலம் நேரடியாக பேசி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பயன்களும் பெறுகிறார்கள்.
வயது முதிர்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமே இந் நிறுவனத்தின் நோக்கம் அவர்களை ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் பாதுகாப்பான வாழ்வளிக்கும் வகையில் இந்த சேவை இங்கு துவங்கப்படுவதாக தெரிவித்தார்…இந்த சந்திப்பின் போது நிறுவனத்தின் கோவை நிர்வாகிகள் திவாகர் மற்றும் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்…இந்தியாவில் அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், பாலக்காடு, மைசூரு ஆகிய நகரங்களில் செயல்பட்டுகொண்டிருக்கும் இந்நிறுவனம், தற்போது கோவை மாநகரில் சேவையை தொடங்க உள்ளது குறிப்பிடதக்கது.
– சீனி,போத்தனூர்.