போபால் ஊரில் தினந்தோறும் அந்த ஊரில் வசிக்கும் பெரியவர்கள் பள்ளி செல்பவர்கள் அனைவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய அவலநிலை அங்கு உள்ளது.
தினந்தோறும் காலை வேலைக்கு செல்பவர்கள் பலரும் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தண்டவாளத்தில் சரக்கு ரயில் வருவது கவனிக்காமல் கடந்தபோது சரக்கு ரயிலை பார்த்தவுடன் அச்சத்துடன் திசை தெரியாமல் திணறினர்.
அச்சமயம் பலரும் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென சினிமா படங்களில் வரும் ஹீரோவை போல தலையில் தொப்பி அணிந்த ஒரு இஸ்லாமிய நண்பர் சட்டென்று அந்த பெண்ணை தண்டவாளத்தின் நடுவே படுக்க செய்து தானும் படுத்துக்கொண்டு தலை எடுக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார் ரயில் முழுதும் கடந்த பின் இருவரும் தண்டவாளத்திலிருந்து எந்திரித்து பெருமூச்சுவிட்டனர்.
நூலிழையில் உயிர் தப்பிய நபர்கள் பல செய்தியை கேள்விப்பட்டு இருக்கலாம் ஆனால் தன்னுயிரையும் பணிய வைத்து மற்றொரு உயிரை காப்பாற்றும் இந்த மனம் தைரியம் வருவது என்று சாதாரணமான விஷயம் அல்ல இந்த சம்பவத்தை பார்த்த அனைத்து மக்களும் அந்த இளைஞரை மிகவும் பாராட்டி அவரை ஆசிர்வதித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.
One Response
அருமையான பதிவு நல்ல தகவல் இது மற்ற நண்பர்களும் பார்த்து பயன் தரும் என்று நினைக்கிறேன் இது போன்ற இன்னும் பல தகவல்கள் தர அன்புடன் ஆதரவு தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம் 👍🌹🌺🌄