எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோவை 82 வது வார்டில் டி.ஏ. ரஷீதா பேகம் வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி அக்கட்சி சார்பில் ஆன வார்டு தேர்தல் அலுவலகம் கோவை மரக்கடை வீதியில் திறக்கப்பட்டது. இவ்வலு வலகத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனாப் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 82 ஆவது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் t.a. ரசிதா பேகம்,பணி குழுத் தலைவர் அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மீடியா மன்சூர், தொகுதி தலைவர் மலர் அப்பாஸ், பணிக் குழு நிர்வாகிகள் ஹெர்குலஸ் ஹக்கீம், மாநில பேச்சாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
– சீனி,போத்தனூர்.