கோவை மாவட்டம். போத்தனூர் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் நான்கு சக்கர வாகனம் ஒன்று மேம்பாலம் மேல் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையில் இருக்கும் தடுப்பு கற்கள் மீது எதிர்பாராதவிதமாக ஏறியதால் நிலைகுலைந்து போன ஓட்டுநர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு அதிர்ச்சியடைந்தார் ஓட்டுநர் சற்று கவனக்குறைவாக இருந்தால் பெரிய விபத்து நேரிடும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை போத்தனூர் மேம்பாலத்திற்கு மேலிருக்கும் சாலையை பிரிக்கும் தடுப்பணை உயரப் படுத்தவேண்டும் என்று அங்கிருக்கும் கற்களை அகற்றிவிட்டு உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக குறிச்சி காதர் ராஜேந்திரன்.