மாணவர்கள் பயிலும் போதே துறை சார்ந்த கற்றல் திறனை வளர்த்து கொள்ளும் விதமாக கோவை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி காலிபர் இண்டர் கனெக்ட் சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் கல்லூரியில் பயிலும் கற்றல் திறனை அதிகரிக்கும் விதமாக துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் கோவை இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது..இந்நிலையில்,கோவையைச் சேர்ந்த காலிபர் இண்டர் கனெக்ட் சொல்யூசன்ஸ் நிறுவனமும் , இரத்தினம் கல்வி குழுமமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தம் செய்து கொண்டனர் . இதற்கான நிகழ்ச்சி இணையவழியாக நடைபெற்றது. இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் ஆ.செந்தில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற,இதில் காலிபர் இண்டர் கனெக்ட் சொல்யூசன்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலர் மெர்வின், தொழில்நுட்ப பிரிவின் இயக்குநர் மோகனசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப முனைவர் இரத்தினம் வளாகத்தின் முதல்வர் முனைவர் நாகராஜ் , துணை முதல்வர் முனைவர் கீதா, டீன் பேராசிரியர் சதிஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த கற்றல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் , புதிய கண்டுபிடிப்புகள் மூலமே நம் சமூகம் வளர்ச்சி அடையும் என்றும் , மாணவர்கள் தங்களை சுற்றியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் ஒரு தொழில் முனைவோரக மாற முடியும் என்றும் பேசினர்.தொடர்ந்து கல்லூரி மற்றும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்னர் கையெழுத்தானது.. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனத்தில் பயிற்சி பெற முடியும் . இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் மாணவர்களுக்கு நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சியை கல்லூரிக்கு வந்தும் , நிறுவனத்திலும் பயிற்சி அளிப்பார்கள் . மேலும் ஆசிரியர்கள் தங்களது கண்டுபிடிப்புகளையும் புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிடலாம் . மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இந்த நிறுவனம் வழங்கும் . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் அருள்ராஜ் மற்றும் அனைத்து பேராசிரியர்கள் . ஆய்வக உதவியாளர்கள், ஆகியோர் செய்திருந்தனர்.
– சீனி,போத்தனூர்.