கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும்
எஸ்.ஐ தியாகராஜன்,
எஸ்.ஐ பாரத நேரு ஆகியோர் ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது.
ஆனைமலை கிழவன்புதுார்-
செமணாம்பதி சாலையில் மறைவான இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்த நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலத்திற்கு விற்பனை செய்யவதற்காக கடத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து
50 கிலோ எடையுள்ள 21 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட கேரளா மாநிலம் இடுக்கிபாறையை சேர்ந்த மைக்கேல் ராஜ் ( 42 ) கைது செய்யப்பட்டார்.
மேலும் இவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
-M.சுரேஷ்குமார்.