வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி 54 வது வார்டு பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக திருமதி
எஸ்.பாக்கியம் தனபால் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கோவை பீளமேடு பகுதியில் தேர்தல் கட்சி அலுவலகத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.மேலும் அமைச்சர் கூறுகையில் 54 வது வார்டில் வேட்பாளராக நிற்கும் திருமதி.பாக்கியம் தனபால் அவர்களுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.இவரை வெற்றி பெற செய்தால் நிலுவையில் உள்ள திட்டங்களும் புதிதாக பல திட்டங்களும் நிறைவேற்றித் தருவார் என உறுதி அளிப்பதாக கூறினார் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் Er.ஈஸ்வரன் பேசுகையில் கோயம்புத்தூரிலுள்ள 100 வார்டுகளிலும் உதய குரியன் உச்சத்தை தொடும் அளவிற்கு உழைக்க வேண்டுமென்று கட்சியினருக்கு வழியுறுத்தினர்.இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால், திமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், பகுதி செயலாளர் சாமி உள்பட நிர்வாகிகள் ஏராளாமனோர் கலந்து கொண்டரை்.
– சீனி,போத்தனூர்.