கோவை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம்
கோவை லட்சுமி மில் சந்திப்பில் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் நேற்றிரவு 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் மற்றும் 14 வயது சிறுவன் ஒருவன் என மூன்று சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வார்டனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது தப்பியோடிய மூன்று சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.