சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் நேற்று மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பாக, பாரம்பரிய உணவு முறைகளை மீட்டெடுக்கும் வகையில் பாரம்பரிய உணவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகலிங்கம் இருவரும் தலைமை தாங்கினர். பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சரவணன், பாரம்பரிய உணவு முறைகள் குறித்தும், பாரம்பரிய வாழ்க்கை முறை குறித்தும் நோயின்றி வாழும் வழிமுறைகள் குறித்தும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சுய உதவி குழுவின் கணிணி இயக்குனர் மகிலா, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து அவற்றை காட்சிப்படுத்தினார். விழா ஏற்பாடுகளை வேங்கைப்பட்டி ஊராட்சி மன்ற செயலர் நல்லம்மாள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் சூர்ய குமாரி இருவரும் செய்திருந்தனர். விழாவில் 30க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.