சுமார் 25,000 மக்கள் தொகை கொண்ட சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
மொத்த வாக்காளர்கள் 16,479பேர்.
இவர்களில் ஆண்கள் 8007 பேர்.
பெண்கள் 8472 பேர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசியல் கட்சிகளிடையே வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வந்தது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்ட பின்பு, நேற்று அதிக எண்ணிக்கையிலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தி.மு.கழகத்தின் நிறுவனரான பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளான நேற்று, தி.மு.க. வேட்பாளர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அங்கிருந்து சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர்கள் விவரம்:
வார்டு 1.அம்பலமுத்து,
வார்டு 2.முகமது நிஷா,
வார்டு 3.ஜெயசித்ராதேவி,
வார்டு 4.சத்யா,
வார்டு 5.வள்ளி,
வார்டு 7.மீனா,
வார்டு 8.ஜெயக்குமார்,
வார்டு 9.தனசேகரி, முத்துதேவி (மாற்று),
வார்டு 12.மணிசேகரன்,
வார்டு 13.செந்தில்கிருஷ்ணன், தங்கேஸ்வரி (மாற்று),
வார்டு 15.செந்தில்குமார் (இந்தியன் செந்தில்)
மனுத்தாக்கல் செய்த
அ.தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்:
வார்டு 1.ரபீக்,
வார்டு 2.கவுதமி,
வார்டு 6.அபிராமி,
வார்டு 7.ராஜலெட்சுமி,
வார்டு 8.ஓவியச்செல்வம்,
வார்டு 13.முத்துப்பிரகாஷ்,
வார்டு 15.வியாழமூர்த்தி,
வார்டு 17.ராஜா,
வார்டு 18.ஜீவிதா.
இது தவிர வார்டு 13ல் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும், 15,16,18 வார்டுகளில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளரும் மனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் நடத்தும் அலுவலராக சிங்கம்புணரி பேரூராட்சியின் செயல் அலுவலர் முகமது ஜானும், துணைத் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாணிக்கவாசகம் மற்றும் அய்யனார் ஆகியோரும் பணி புரிந்து வருகின்றனர்.
சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர் குகன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– ராயல் ஹமீது, அப்துல் சலாம்.