இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண் 1 மற்றும் 5இல் அம்பலமுத்து மற்றும் வள்ளி மனோகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், மீதமுள்ள வார்டுகளில் கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி, நடைபெற்று வருகிறது.
வார்டு வாரியாக வாக்குச்சாவடி மையங்களின் விவரம் வருமாறு:
வார்டு எண்-2:
பஞ்சாயத்து யூனியன் பள்ளி எண்-3ல் (ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம்) எஸ்.எஸ்.ஏ கட்டிடத்தில் ஆண்களுக்கும், அதே பள்ளியில் கிழக்குப்புறமாக உள்ள கட்டிடத்தில் பெண்களுக்கும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது
வார்டு எண் -3:
சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மேற்குப்புற கட்டிடத்தில் ஆண்-பெண் இருபாலருக்கும் ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது
வார்டு எண்-4:
சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் வடக்கு பகுதியில் ஆண்களுக்கும், அதே பள்ளியில் தென் பகுதியில் பெண்களுக்கும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது
வார்டு எண்-6:
வேட்டையன்பட்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் வடக்குப்புறம் உள்ள வாக்குச் சாவடியில் ஆண்-பெண் இருபாலருக்கும் ஒரே வாக்குச்சாவடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வார்டு எண்-7:
வேட்டையன்பட்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் உள்ள எஸ்.எஸ்.ஏ கட்டிடத்தின் வடக்கு பகுதியில் ஆண்-பெண் இருபாலருக்கும் ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது
வார்டு எண்-8:
வேட்டையன்பட்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் உள்ள எஸ்.எஸ்.ஏ கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் ஆண்-பெண் இரு வாக்காளர்களுக்கும் ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 9:
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி எண்-2ல் தென்புறம் ஆண் பெண் இரு பாலருக்கும் ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 10:
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி எண்-2ல் வடக்குப்பகுதியில் ஆண், பெண் இரு பாலருக்கும் ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது
வார்டு எண் 11:
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி எண்-4ல் கிழக்குப் புறமாக உள்ள பள்ளி வளாகத்தில் தற்காலிக வாக்குச்சாவடியில் ஆண்-பெண் இருபாலாருக்குமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 12:
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி எண்-4ல் மேற்குப்புறமாக உள்ள பள்ளி கட்டிடத்தில் ஆண்-பெண் இருபாலாருக்குமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 13:
சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு புறம் உள்ள கட்டிடத்தில் ஆண்களுக்கும், அதே பள்ளியில் தென்புறம் பெண்களுக்கும் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 14:
சிங்கம்புணரி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உள்ள மேற்குப்புற கட்டிடத்தில் ஆண்-பெண் இருபாலருக்கும் ஒரே வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 15:
பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி எண்-1ல் மேற்குப்புறமாக உள்ள கட்டிடத்தில் ஆண் வாக்காளர்களுக்கும், அதே பள்ளியின் நடுப்பகுதியில் பெண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 16:
வாக்குச்சாவடி பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி எண்-1ல் கிழக்குப்புறமாக உள்ள வாக்குச்சாவடியில் ஆண்-பெண் இருபாலருக்குமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 17:
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி எண்-5ல் ஆண்-பெண் இருபாலருக்குமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு எண் 18:
பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி எண்-6ல் வடக்குப் புறமாக உள்ள கட்டிடத்தில் ஆண்களுக்கும், அதே கட்டிடத்தில் தென்புறத்தில் பெண்களுக்கும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.