தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை மூலம் தெரிவிக்கப்படுகிறது.
5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜேந்திரன், ஈசா.