தமிழகத்தில் நோய்த்தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் நோய்த்தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை இந்நிலையில் அம்மாநில முதல்வர் பிரானயி விஜியன் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். ஊரடங்கான நாளை ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.