பொள்ளாச்சி அருகே பெரிய நெகமம் பேரூராட்சியில் ஒரு சுயேச்சை மற்றும் 8 திமுக வேட்பாளர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. பொள்ளாச்சியை அடுத்த பெரிய நெகமம் பேரூராட்சிக்கு அறிவிக்கப்பட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், வார்டு எண் 3, 6, 7, 8, 9, 11, 12, 14, 15 ஆகிய 9 வார்டுகளில் போட்டியிடும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. பிரியா, 6வது வார்டில் ஜெ. பரமேஸ்வரி, 7வது வார்டில் என். தேவிகா, 8வது வார்டில் கே. நந்தவேல்முருகன், 11வது வார்டில் ஆர். கஸ்தூரி, 12வது வார்டில் டி. கலைமணி, 14வது வார்டில் ப. நாகராஜ் 15வது வார்டில் ஆர். சபரீஸ்வரன் என 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், ஒரு வார்டில் (9வது வார்டு) சுயேச்சை வேட்பாளர் ஆர். ரவி என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பெரும்பான்மை வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால் நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. வார்டு எண் 1. 2, 4, 5, 10, 13 ஆகிய 6 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.
வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்ட திமுகவினர் வாழ்த்து தெரிவித்து
மேலும் பேரூராட்சி திமுகவை கைப்பற்றியதால் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.