கவுன்சிலர் நிதி எந்தெந்த பணிகளுக்கு செலவிடப்பட்டது என்பது தொடர்பாக மாதந்தோறும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக பட்டியலிட்டு காட்டுவேன் என மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரம்யா வேணுகோபால் தெரிவித்துள்ளார்..
கோவை மாநகராட்சியின் 63 வது வார்டு வேட்பாளராக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ரம்யா வேணுகோபால் போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாக வார்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வரும் ரம்யா வேணுகோபால் கடந்த சில தினங்களாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள பஜனை கோயில் வீதியில் ரம்யா வேணுகோபால் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து டார்ச்லைட் தினத்திற்கு ஆதரவு திரட்டினார். கோவை மாநகராட்சியின் 63 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் சரிசெய்து தரப்படாததன் காரணமாக பொதுமக்கள் அடிப்படை வசதிகளையும் பிரச்சினைகளாக வைத்துள்ளதாகவும் தான் வெற்றி பெற்றவுடன் அடிப்படை பிரச்சினைகளை சரி செய்து தருவேன் எனவும் உறுதியளித்தார்.
மேலும் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பொதுமக்கள் எளிதாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய ரம்யா வேணுகோபால் குடிநீர் பிரச்சனையால் இப்பகுதி மக்கள் வாரம் ஒரு நாள் வேலை இழந்து தவித்து வருவதாகவும் அதனை சரி செய்து சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார். மேலும் கவுன்சிலர் நிதி சார்ந்த பணிகளுக்கு செலவிட பெற்றது என்பது தொடர்பாக மாதந்தோறும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக பட்டியலிட்டுக் காட்டுவேன் எனவும் அப்போது அவர் உறுதியளித்தார்..
பேட்டி-ரம்யா வேணுகோபால்- மக்கள் நீதி மைய்யம் வேட்பாளர்.
– சீனி,போத்தனூர்.