பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு காலை 4 மணி முதல் 9 மணி வரை ஏழுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
ஆனால், இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. 5 பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை.
இதனால், வாக்களிக்க வால்பாறை செல்ல பொள்ளாச்சியில் காத்திருந்த பயணிகள் மற்றும் வழக்கமாக வால்பாறை செல்லும் பயணிகள் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.