கோவை நகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் 97 வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் நிவேதா சேனாதிபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டத்தில் மாநகராட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை மதுக்கரை பகுதி
97 வது வார்டு திமுக கவுன்சிலர் வேட்பாளரான நிவேதா சேனாதிபதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இதனை ஒட்டி கோவை சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் நிவேதா சேனாதிபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுக சால்வை அணிவித்து அவர் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த நிவேதா சேனாதிபதி, தான் போட்டியிடக்கூடிய 97 வது வார்டில் இருக்கக்கூடிய அடிப்படை பிரச்சனைகளை தான் வெற்றி பெறும் பட்சத்தில் தீர்த்து வைக்க கட்டாயம் பணியாற்றுவேன் என்று உறுதி அளித்தார். தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மக்களிடம் தனது தனது பிரச்சாரத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறினார். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செல்வ குமார், குமார்,அருண் ராஜ்
ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
– சீனி,போத்தனூர்.