மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதை கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதைதொடர்ந்து, சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்டை வாக்குபதிவு மையத்திலிருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது.
மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக பூத் ஏஜென்ட் ஒருவர், ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு மற்ற பூத் ஏஜெண்டுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
கலாட்டா செய்த பாஜக முகவர் பூத்தை விட்டு. வெளியேற்றப்பட்டார்.
அரசமைப்புச் சட்டப்படி யாரும் எந்த உடையணிந்தும் வாக்களிக்கலாம்!
மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தகவல்