குறிச்சி பகுதியில் உள்ள 85,94,95,96,97,98,99,100 வார்டுகளில் வெற்றி யாருக்கு..?

மிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வருகின்ற 19ஆம் தேதி நடத்த இருக்கின்றது. கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 இடங்களை பிடிப்பது எந்த கட்சி என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை கோவை மாநகராட்சி அதிமுக தன்வசம் வைத்தது போல் இம்முறையும் அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை அமையுமா….

கொங்கு மண்டலத்தை கோட்டைவிட்ட திமுகவுக்கு ஆறுதல் பரிசாக இம்முறை கோவை மாநகராட்சி தன்வசம் ஆகுமா…

மக்களின் ஆதரவு யாருக்கு என்ற தலைப்பில் மாநகராட்சி 1 முதல் 100 வார்டுகள் வரை பொதுமக்களிடம் நமது இதழின் சார்பாக ஒரு சிறந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளோம்.

கோவை மாநகராட்சியின் தெற்கு திசையில் அமைந்துள்ள குறிச்சி பகுதியில் எட்டு வார்டுகள் உள்ளது, இந்த வார்டுகளில் ஒருசில அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர்களும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக + திமுக இடையேதான் கடுமையான போட்டி இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதிமுக வேட்பாளர்கள்

1, குறிச்சி கற்பகம் சிவா
(வார்டு நம்பர் 85 தனி)
2, பாலகிருஷ்ணன் (வார்டு நம்பர் 94)
3, ஹில்லர்
(வார்டு நம்பர் நம்பர் 95)
4, செந்தில்குமார் (வார்டு நம்பர் 96)
5, பாபு
(வார்டு நம்பர் 97)
6, நிஜாம்
(வார்டு நம்பர் 98)
7, ரபி
(வார்டு நம்பர் 99)
8, வேணுகோபால் (வார்டு நம்பர் 100)

திமுக வேட்பாளர்கள்

1, xxx (வார்டு நம்பர் 85)
2, தனலட்சுமி
(வார்டு நம்பர் 94)
3, காதர்
(வார்டு நம்பர் 95)
4, குணசேகரன்
(வார்டு நம்பர் 96)
5, நிவேதா சேனாதிபதி (வார்டு நம்பர் 97)
6, உதயகுமார்
(வார்டு நம்பர் 98)
7, அஸ்லம் பாஷா (வார்டு நம்பர் 99)
8, கார்த்திகேயன்
(வார்டு நம்பர் 100)

இவர்களைத் தவிர பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளனர் இவர்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு….??? கருத்துக்கணிப்பு… நாளை வெளியிடப்படும்.

-நிருபர்கள் குழு,
ஈஷா, சுரேஷ்குமார், ராஜேந்திரன், அருண்குமார், சாதிக் அலி, சுரேந்தர்.

Leave a Comment

2 Responses

Leave a Reply to Hameeda Haroon Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts