மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பாக நடைபெற்றது. வாக்கு பதிவு நாளான நேற்று மக்கள் காலை நேரத்தில் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர் இந்நிலையில் பிற்பகலுக்கு மேல் சற்று கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் மாலையில் மிகவும் மந்தமாகவே இருந்தது. 22வது வார்டில் 13300 வாக்காளர்கள் இருந்தும் 53 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது தெரிய வந்திருக்கின்றது.
இப்பகுதியில் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று மந்தமான நிலை காணப்பட்டது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்லு கிணங்க வாக்கு எண்ணிக்கை நாளான செவ்வாய்க்கிழமை 22 ம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
-சாதிக் அலி.