தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜக சார்பாக 99 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் கோகுலகிருஷ்ணன்,
இவர் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்கு பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்து வந்ததாக கூறி வருகிறார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தன்னுடைய தலையாய கடமையாக எண்ணி உள்ளார் மீண்டும் பிரதமரின் திட்டங்களை இவர் மக்களிடையே சென்றடைய செய்திருக்கிறார் என்கிறார்கள்.
பொதுமக்களின் அடிப்படை பிரச்சனையான தார்சாலை பிரச்சினை மின்விளக்கு குடிநீர் மற்றும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு அகற்றும் சம்பந்தமாக கூறும் இவர் வெற்றி பெற்றால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக 99 வது வார்டு மக்களிடையே எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும் 99 வது வார்டில் திமுக, அதிமுக கட்சிகளுக்கிடையே மூன்றாவது அணியாக களமிறங்கியிருக்கும் பாஜக வேட்பாளர் கோகுலகிருஷ்ணன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று கூறுகின்றனர் அக்கட்சியினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,
-ஈசா.